இன்றைய தலைப்பு செய்திகள் (19-12-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மீட்பு பணிகள் தீவிரம்

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் தீவிரம்...

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என பாதிக்கப்பட்ட அனைவரும் ரப்பர் படகுகள், ஜேசிபி உதவியுடன் மீட்பு...

"மழைவெள்ளம் - 10 பேர் பலி"

மழை, வெள்ள பாதிப்பால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதுவரை 10 பேர் பலி...

நிவாரண முகாம்களில் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தகவல்...

9 ஹெலிகாப்டர்கள், 323 படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கம்...

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை...

வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இன்று அறிவிப்பு...

ரயிலில் சிக்கியவர்கள் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் 2 நாட்களாக சிக்கியிருந்த பயணிகள் இன்று மீட்பு...

ஏராளமானோர் தண்டவாளம் வழியாக நடந்தே வெளியேறிய துயரம்...

வாஞ்சி மணியாச்சியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு...

முதலமைச்சர் நாளை ஆய்வு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை வெள்ள பாதிப்பை பார்வையிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மீட்பு பணிக்கு கூடுதலாக ஹெலிகாப்டர்கள் கேட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று கடிதம்...

மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைத்தால் தான், வெள்ள நிவாரண பணிகளை முழு வீச்சில் செய்ய முடியும் எனவும் பேட்டி...

நிவாரண தொகை - ஈ.பி.எஸ். வலியுறுத்தல்

தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்...

நெல்லையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

விடுதலை ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை இன்று ரத்து...

வருகிற 21ஆம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதால், நேரில் ஆஜராகவும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...

4வது ஆலோசனை கூட்டம்

டெல்லியில் இந்தியா கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டம்...

சோனியா காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு...


Next Story

மேலும் செய்திகள்