இன்றைய தலைப்பு செய்திகள் (06-02-2024)

x

இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

MY V3 Ads நிறுவனம் மீதான மோசடி புகார் தொடர்பாக, உரிமையாளரிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஐந்து மணிநேரம் விசாரணை..

மோசடி புகாரால் தமது நிறுவனம் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக பேட்டி..

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் ஜனநாயக கேலிக்கூத்து என உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்..

தேர்தல் நடத்திய அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கண்டனம்..

பொது சிவில் சட்டத்திற்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் எதிரொலி..

உத்தரகாண்ட் சட்டமன்ற கூட்டத் தொடரில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது..

வரும் 24ஆம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்திற்கு அழைப்பு வந்தால் கலந்து கொள்வேன்..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்..


Next Story

மேலும் செய்திகள்