காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத்துறை சோதனை..

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாகிறது..

வரும் 23ஆம் தேதி வேட்பாளர்களை சென்னையில் அறிமுகம் செய்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..

தமிழகம் முழுவதும் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார், முதலமைச்சர் ஸ்டாலின்..

ஏப்ரல் 17ம் தேதி வரை இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம்.

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய

வேண்டும்..

வேட்பாளர்களுக்கு இலவசமாக பட்டியலை வழங்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..


Next Story

மேலும் செய்திகள்