இன்றைய தலைப்புச் செய்திகள் (16-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

"திருவள்ளுவரின் போதனைகள் காலத்தால் அழியாதவை"

திருக்குறளில் திருவள்ளுவர் அளித்த போதனைகள், காலத்தால் அழியாதவை என பிரதமர் மோடி புகழாரம்...

தலை சிறந்த தமிழ்ப்புலவரை நினைவு கூரும் வகையில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம் என்றும் தமிழில் பதிவு...

"திருவள்ளுவர் - சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி"

பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு பணிவான மரியாதை...

திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் ரவி, எக்ஸ் தளத்தில் பதிவு...

"தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது"

133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் தமிழ்நாட்டில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று, முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை வலியுறுத்தியவர் வள்ளுவர் என்றும் புகழாரம்...

"ஆளுனர் கருத்து - அடிப்படை புரிதலே இல்லை"

எந்த மதத்தையும் திருவள்ளுவர் முன்மொழியவில்லை என்ற அடிப்படை புரிதலே இல்லாத வகையில் ஆளுநரின் கருத்து உள்ளது...

தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் கண்டனம்...

"திமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் நெருங்குகிறது"

தி.மு.க. அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் நெருங்குவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை...

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் கட்சியினர் சூளுரை ஏற்குமாறு வேண்டுகோள்...


Next Story

மேலும் செய்திகள்