கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி... பிஞ்சு குழந்தைகளுடன் ரோட்டில் கணவன் - சென்னையில் அரங்கேறிய சோகம்

x

ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த நஜிபுல் ஷேக், அவரது மனைவி சஹினா, இரண்டு குழந்தைகளுடன் கடந்த மாதம் சென்னை வந்தனர். மேடவாக்கத்தில் கட்டிடப் பணி நடைபெறும் இடத்தில் தங்கி அங்கேயே பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அதே கட்டிடத்தில், வேலை பார்த்து வந்த ஒடிசாவை சேர்ந்த சித்தாரா என்பவருடன் சஹினாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி மாலையில், நஜிபுல் ஷேக் வீடு திரும்பியபோது குழந்தைகள் மட்டும் இருந்தன. அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் மனைவி கிடைக்காத நிலையில், சித்தாராவும் காணாமல்போனது தெரியவந்தது. இதையடுத்து, தனது குழந்தைகளுடன் பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு வந்த நஜிபுல் ஷேக், தனது மனைவியை மீட்டுத்தரும்படி புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்