"நம்பி விதைச்சோம்..இப்போ அத அழிக்கிறதா?"நாற்றோடு காய்ந்து வெடித்த நிலங்கள்

x

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், திருக்குவளை அடுத்த வலிவலம், எட்டுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட 300 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் நாற்றுகள் காய்ந்து, கருகும் நிலை உருவாகியுள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் இல்லாததால், குறுவை நாற்றுகள் எரிந்தும், வயல்கள் வெடித்தும் காணப்படுகின்றன. இதனிடையே, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்