TNPSC தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த சோதனை..செட்டப்.. ரூ.1 கோடி.. கதறும் பெண்கள் - `ப்ளீஸ் நீங்களும் இப்படி ஏமாந்திடாதீங்க'

x

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூதன முறையில் நாடகமாடி ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவான நபரால், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி வேதனை அளிக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவர், சில இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் சென்று திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், தேர்வு எழுதி காத்திருந்தவர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி தொடர்புகொண்ட நபர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள டிஆர்ஓ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அப்போது அங்கிருந்து கவுரிசங்கர், உஷாராணி ஆகியோர் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் எனக்கூறி, ஒவ்வொருவரிடம் இருந்தும் ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்றனர். பின்னர் தன்னை நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தற்போது கண்காணிப்பாளராக பதவி வகித்து வரும் ராஜ்குமார் என்பவர், சான்றிதழை சரிபார்த்ததாக முத்துக்குமார் தெரிவித்துள்ளார். அரசுப் பணியில் சேர்வதற்கு முன்பாக நடைபெறும் நடைமுறைகள் எல்லாம் நடந்த பின்னர், 11 பேரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வாங்கிய நிலையில், திடீரென அவர்களின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். எனவே பணத்தை மீட்டுத் தருமாறு அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பணத்தை இழந்த பெண் ஒருவர் கதறி அழுதது வேதனை அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்