கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி வேறு பெண்ணுடன் ஓட்டம்பிடித்த காதலன்..

x

திருச்சியில், தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு, மற்றொரு பெண்ணுடன் காதலன் சென்று விட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணும், மற்றொரு பெண்ணின் குடும்பத்தினரும் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி திருவளர்ச்சோலையைச் சேர்ந்த அந்த இளைஞரும், கல்லூரி மாணவியும் நண்பர்களாக பழகி, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி கர்ப்பமான நிலையில் அவரை திருமணம் செய்யாமல் அந்த இளைஞர் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே, அந்த இளைஞரின் குடும்பத்தினர், மாணவியை மிரட்டியதால், லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கிடையே, அந்த இளைஞர் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அவரை ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இரு பெண்களின் குடும்பத்தினரும்,நீதி கேட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்