காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-08-2023)

x
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி...
  • சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பகுதியில் மீண்டும் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்...குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்றிய ஊழியர்கள்....
  • தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்ற வேண்டும்....நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என்ற லட்சியத்துடன் பணியாற்ற திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு....
  • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்காமல் தடுப்போம் என்ற பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா?மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிப்பது என அராஜகம் தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு......
  • ராமநாதபுரத்தில் இன்று நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.....விளம்பர பலகைகளுடன் படகுகளில் நடுக்கடலுக்கு சென்று நூதனமான முறையில் அழைப்பு விடுத்த திமுக மீனவரணி.....
  • மதுரையில் 20ம் தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா ஆண்டு மாநாட்டின் இறுதி கட்டப் பணிகள் தீவிரம்....15 லட்சம் பேருக்கு தயாராகும் பிரம்மாண்ட சமையல்.....

Next Story

மேலும் செய்திகள்