``லைன் லைன்...லைன்ல வா மா... தலைக்கு நூறு... நூறு...நூறு?'' - வைரலாகும் பரபரப்பு வீடியோ
மதுரை அலங்காநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆதரவாளர் பணப்பட்டுவாடா செய்வதைப் போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... நாராயணசாமி அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாக சென்று தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சியினருடன் அவர் வாக்கு சேகரிக்க சென்ற நிலையில், அவர் கிளம்பியதும் கல்லணை கிராமத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் பெண்களுக்கு தலைக்கு ரூபாய் நூறு வீதம் பணப்பட்டுவாடா செய்வதைப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது... மேலும் பிரச்சாரத்திற்கு அனுமதியை மீறி 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story