சென்னைக்கு காத்திருக்கும் மழை... சூறாவளி காற்று.. - உடனே பறந்த அதிரடி உத்தரவு

x

அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 அல்லது 24 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அதை ஒட்டிய மாலத்தீவுகள், இலங்கை கடலோரத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு கேரள கடலோரம், அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்