#JUSTIN : போலீசாருக்கு டிமிக்கி... கண்ணில் மண்ணை தூவி போக்ஸோ கைதி தப்பியோட்டம்

x

கோவையில் கைதி தப்பியோட்டம். கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த தண்டனை கைதி தப்பியோட்டம். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நன்னடத்தை கைதிகளை பெட்ரோல் பங்கில் ஷிப்ட் முறையில் போலீசார் பணியமர்த்தி வரும் நிலையில், கைதி தப்பியோட்டம்/இன்று காலையில் ஷிப்ட் மாற்ற பணியில் உள்ளவர்களை எண்ணிய போது, கைதி மாயமானது கண்டுபிடிப்பு. தப்பியோடிய கைதி, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என போலீசார் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்