தமிழகம் முழுவதும் 27 இடங்கள்... குறி வைத்து களமிறங்கிய NIA; சிக்கிய சீக்ரெட்ஸ்... பரபரத்த ரெய்டு

x

NIA officials

சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள நவீத் கான் என்பவரது வீட்டில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், நவீத் கான் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், செல்போனை எடுத்து சென்றனர்.

FTP Perambur thiru.vi.ka.nagar nia raid.

சென்னை பெரம்பூரில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி முகமது அட்டாவுல்லா பாட்ஷா வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. 5 பேர் கொண்ட குழுவினர் சுமார் இரண்டரை மணி நேரம் நடத்திய சோதனையின் முடிவில், அவரது செல்போன் மற்றும் சிம் கார்டுகள், ஆதார் கார்டை எடுத்து சென்றனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

FTP Virudhachalam NIA news-2

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சுலைமான் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் இறுதியில், சுலைமான் பயன்படுத்திய இரண்டு செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவருக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.

FTP VALLIOOR ERUVADI NIA NEWS

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் பக்ருதீன் அலி வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை கூடுதல் கண்காணிப்பாளர் பரத்நாயக் தலைமையிலான 3 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்