"தேர்வில் கை வைப்பேன்" ஆளுநரை வரவேற்காத விவகாரம்... மாணவர்களுக்கு மிரட்டல் -அதிர வைத்த ஆடியோ

x

ஆளுநரை வரவேற்க வராத கல்லூரி மாணவர்கள்,தேர்வு எழுத முடியாது என மாணவ, மாணவிகளை மிரட்டும் தனியார் கல்லூரி முதல்வரின் வாட்ஸ் அப் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நாகை வருகை தர உள்ளார். இதனிடையே, ஆளுநரை வரவேற்பதற்காக, நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரியின் முதல்வர் இளவேந்தன், கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு வரவேண்டும் என வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்து இருந்தார். அதில், மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு அதிகாலை 6.30 மணிக்கே வர வேண்டும் என்றும், வராமல் தவறும் பட்சத்தில், அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் சந்திக்க நேரிடும் என எச்சரித்து பேசியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று, கல்லூரிக்கு மாணவ மாணவிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமுற்ற கல்லூரி முதல்வர் இளவேந்தன், மாணவர்களை மிரட்டும் விதத்தில் மீண்டும் ஒரு ஆடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்