சாலை மறியல் போராட்டத்தில் பரபரப்பு.. திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி

x

2 மாதங்களுக்கு மேல் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும் சீரான முறையில் குடிநீர் வழங்க கோரியும் கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

பெள்ளேபாளையம் கிராம மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் 2 குழுக்களாக பிரிந்து சிறுமுகை நால்ரோடு சந்திப்பு மற்றும் வெள்ளிக் குப்பம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கடும் வெயிலால் போராட்டக்காரர்கள் சாமியானா பந்தலுடன் வந்த நிலையில், சாமியானா போட போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 73 வயது மூதாட்டி விஜயா மணி என்பவர் மயங்கி கீழே விழுந்தார்... உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது... அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்