இயற்கை அழகை ரசிக்க கொடைக்கானலில் குவிந்த மக்கள்...செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

x

கொடைக்கானலில் வார விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினையும், ம‌லைப்ப‌குதிக‌ளில் த‌வ‌ழ்ந்து செல்லும் மேக‌க் கூட்ட‌ங்க‌ளையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்