"பஸ் ஸ்டாண்டே கட்டி முடிக்கல.. இது தான் எங்க இறுதி முடிவு" ஆம்னி பேருந்துகள் சங்க தலைவர் பேட்டி

x

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது திடீரென பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என்றால் என்ன செய்வது? நேற்றிரவு திடீரென அறிவிப்பு வழங்கி 30-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு கூறினர். 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், எப்படி இடத்தை மாற்ற முடியும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. நேற்றிரவு திடீரென அறிவிப்பு வழங்கி 30-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு கூறினர்.திடீரென கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வருமாறு பயணிகளுக்கு எப்படி கூற முடியும்? ஆம்னி பேருந்துகளை நிறுத்த கிளாம்பாக்கத்தில் போதுமான இடமில்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்