"இன்னும் ஒரே வாரம் தான்"கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்..களமிறங்கிய நண்பர்கள்..| Tirupur

x

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திருப்பூரின் முக்கிய கடை வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது... ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள நிலையில், முக்கிய சாலையான குமரன் சாலையில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன... புது மார்க்கெட் வீதி, மாநகராட்சி அருகே உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது... உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்... கூட்டம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்