வெப்ப அலை வீசும்... ஆனால் தமிழகத்தில் மழை? - வானிலை மையம் சொன்ன தகவல்

x

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியசும், திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 41.6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தென் தமிழகம், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்