அதிநவீன கருவிகளுடன் காடுகளுக்குள் களமிறங்கிய வனத்துறை | Forest Officers

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது...

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல வனச்சரகங்களில், தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி, முதுமலை மற்றும் நெலாக்கோட்டை சரகங்களில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. தாவர உண்ணி, ஊனுண்ணி கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உள் மண்டல வனப்பகுதியில் 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மொத்தம் 37 குழுக்களாகப் பிரிந்து தலா 5 பேர் வீதம் 185 பேர் கணக்கெடுத்து வருகின்றனர். வனவிலங்குகளின் எச்சம், கால் தடம், மரக்கீரல், தரைக்கீரல் போன்றவை வைத்து கணக்கெடுக்கப்படுகிறது... முதுமலையில் செல்போன் செயலி மூலம் இது நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவில் உள்ளவர்களும் தொலைநோக்கி, GPS கருவி, தர்மா மீட்டர் போன்ற உபகரணங்களை வைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்