சென்னையில் அரசு நிலத்தை பட்டா போட்டு வித்த கும்பல் - JCB-யோடு இறங்கிய 82 வயது முதியவர்

x

சென்னை, வேளச்சேரியில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை ஜேசிபி மூலம் அகற்றி தகராறு செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள செல்வா நகரில், கடந்த 1973 ஆம் ஆண்டு சமூக நலக்கூடம் கட்ட அரசு சார்பில் 35 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஒருவர் ஆக்கிரமித்த நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நிலத்திற்கான தனிநபர் பட்டாவை ரத்து செய்த நீதிமன்றம், மாநகராட்சி பெயரில் பட்டா வழங்கி உத்தரவிட்ட நிலையில், அங்கு சுமார் 7 கோடி செலவில் திருமணம் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் சுற்றி வேலி அமைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெர்னான்டோ என்ற 82 வயது முதியவர், ஜேசிபி வாகனத்துடன் வந்து மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை அகற்றி தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், முதியவர் மற்றும் ஜேசிபி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இந்த நிலத்தை சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு கும்பல் முதியவருக்கு விற்பனை செய்து ஏமாற்றியது தெரியவந்தது. அரசு இடமெனத் தெரியாமலேயே நிலத்தை வாங்கி முதியவர் ஏமாந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்