நேற்று மாலையே தத்தளித்த நுழைவுவாயில்.. விடிய விடிய திணறிய சென்னை GST

x

நேற்று மாலையே தத்தளித்த நுழைவுவாயில்

விடிய விடிய திணறிய சென்னை GST

கிளாம்பாக்கம் திறந்தும்..மீண்டும் அதே காட்சி

தேர்தலில் ஓட்டுப்போட சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்பிய நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மக்களவை தேர்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள், மீண்டும் சென்னை திரும்பிய நிலையில் தலைநகரின் நுழைவுவாயில் போக்குவரத்து நெரிசலால் தத்தளித்த காட்சிதான் இது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்காக கடந்த வெள்ளிகிழமை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுப்பு.

இதன் காரணமாக பெரு நகர சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். வியாழன் அன்று மாலையே, பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கார், பேருந்து, இருசக்கர வாகனங்கள் என பல கிலோமீட்டர்களுக்கு அணி வகுத்து நின்றன.

நேற்று மாலை முதலே வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் போக்குவரத்து போலீசார் திணறினர்.

ஜிஎஸ்டி சாலையை பொருத்தவரை சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னும், போக்குவரத்து நெரிசலால் சென்னை நகருக்குள் நுழைய முடியாமல் தவிப்பது, பயணிகளிடம் சலிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்