சென்னை கோயம்பேட்டில் சிறப்பு சந்தை... களைகட்டும் விற்பனை

x

கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், 15 கரும்புகள் கொண்ட 7 முதல் 8 அடி நீளமுள்ள ஒரு கட்டு கரும்பு 600 முதல் 700 ரூபாய்க்கும், 5 முதல் 6 அடி நீளமுள்ள கரும்பு ஒரு கட்டு 450 முதல் 500 ரூபாய்க்கும், 3 முதல் 4 அடி உள்ள கரும்பு 300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது... குறைந்த பட்சம் 150 முதல் அதிகபட்சம் 700 ரூபாய் வரை ஒரு கட்டு கரும்பு விற்பனை செய்யப்படுகிறது... இஞ்சி ஒரு கட்டு 150 முதல் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது... அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அங்காடி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது... வரும் 17ம் தேதி வரை இந்த சிறப்பு சந்தை செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்