சென்னை வெள்ள பாதிப்பு.. 86 பக்க அறிக்கையில் இருந்த முக்கிய கோரிக்கை

x

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில், சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு கடந்த ஆண்டு இறுதியில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக, 86 பக்க அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது. அதில், நகர்ப்புற திட்டமிடல், திடக்கழிவு மேலாண்மை, பருவகால மாற்றம், பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட 11 வகையான பிரிவுகளின் கீழ் 365 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, உயர்நிலை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், இதன்மூலம் பணிகளை முழுமையாக ஆய்வு செய்து, முடிக்க வசதி ஏற்படும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்