ஆசைக்கிணங்க மறுத்த சித்தாள் பெண்... கொத்தனார் செய்த கொடூர செயல் - வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

x

சென்னை, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பெண் ஒருவர்.. கட்டட வேலையில் சித்தாளாக பணியாற்றி வந்த நிலையில்.. சென்னை, கே.கே.நகரில் உள்ள வீடு ஒன்றை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் கட்டடத்துக்குள்ளே மயங்கி விழுந்து கிடந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், திருமணமாகி இரு குழந்தைகளுக்கான தாயான அப்பெண், திருவெற்றியூரை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் என்பவரின் கீழ் சித்தாளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. பணியின் போது அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வேல்முருகன், இணங்க மறுத்த அப்பெண்ணை தலையில் சுத்தியலால் அடித்துக் கொன்றது தெரியவர, வேல்முருகனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்