சிரித்துக் கொண்டே சென்ற மாணவர்களுக்கு அடுத்த நொடியே அரங்கேறிய பயங்கரம்

x

சிரித்துக் கொண்டே சென்ற மாணவர்களுக்கு அடுத்த நொடியே அரங்கேறிய பயங்கரம்... சிதறிய உடல்கள்...சாலையெங்கும் ரத்த வெள்ளம்

கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்திருக்கின்றனர்.. நொடிப் பொழுதில் அரங்கேறிய விபத்தொன்றில் மாணவர்கள் நால்வரின் உயிர் பறிபோயிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது...

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகேயுள்ள சிறுநாகலூர் என்ற இடத்தில் அரங்கேறியிருக்கிறது இந்த கோர விபத்து...

சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று உரசியதில், பேருந்தில் இருந்து சிலர் கொத்தாக சாலையில் விழுந்திருக்கின்றனர்...

அனைவரும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள்....

பேருந்துக்கும் கன்டெய்னர் லாரிக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி கீழே விழுந்த மாணவர்களில் நான்கு பேர்.. ரத்தம் வழிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

விபத்தில் உயிரிழந்த... மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 4 மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்து வந்திருக்கின்றனர்...

மாணவர்கள் பயின்று வந்த கல்லூரியான.... மேல்மருவத்தூர் அருகேயுள்ள மாலோலான் கலைக் கல்லூரி நிர்வாகம்... மாணவர்களுக்கு நேர்ந்த இந்த துயரச் சம்பவத்தை அறிந்து கல்லூரிக்கு விடுமுறை அளித்த நிலையில், கல்லூரி வளாகத்திலே சக மாணவர்கள் முன்னிலையில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தியது...

உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர்களும்... பிள்ளைகள் படித்து முடித்தவுடன் குடும்ப நிலை மாறிவிடும் என அவர்களின் பெற்றோர் மலைபோல் நம்பியிருந்தவர்களுமான நிலையில், இந்த 4 மாணவர்களின் இறப்பு அவர்களின் குடும்பத்தினரை நிலை குலைய செய்திருக்கிறது...

"மகனை இழந்து வாழ்க்கையை வெறுத்துபோயிருந்தேன்"

"பேரனுக்காகத்தான் வாழ்ந்து வந்தேன்"

"உடலை பார்க்க கூட நாதியில்லாமல் நிற்கிறோம்"

இந்த விபத்தில், நண்பரை பறிகொடுத்து விரக்தியில் இருந்து இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்தார்... அந்த ஓட்டுநர் எப்பொழுதும் வாகனத்தை அலட்சியமாகத்தான் இயக்குவார் என்றும்... சில நாட்கள் முன்பே இதுபோல் ஒரு விபத்து ஏற்பட இருந்து நூலிழையில் தப்பினோம் என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

"தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம்"

"சில நாள் முன்பு இதேபோல் பெரும் விபத்து நடக்க இருந்தது"

"நூலிழையில் தப்பினோம்..."

பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், மேலும் ஐந்து மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்