காரில் சுற்றுலா சென்ற நண்பர்கள்...பேருந்து மீது மோதி விபத்து..

x

செங்கல்பட்டைச் சேர்ந்த நண்பர்களான தினேஷ், பூபதி, வசீகரன் உள்ளிட்டோர் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தின் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் பின்பக்கம் கார் சிக்கிய நிலையில், பேருந்தை லாவகமாக சாலையோரம் ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பேருந்தின் பின்பக்கம் சிக்கிய கார் மீட்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்