Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-11-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை அறந்தாங்கி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...


  • டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்....... காவிரியில் 13 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு தரப்பில் வலியுறுத்த திட்டம்...


  • செய்யாறு அருகே, 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பி தெரிவித்து பேரணியாக சென்ற கிராம மக்கள் கைது... 9 மணி நேரத்துக்கு பின், சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்...


  • குணச்சித்திர நடிகரும் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனுமான ஜூனியர் பாலையா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி... சென்னையில் இன்று நடிகர் ஜூனியர் பாலையாவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது...

  • கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியீடு.... மாலை 5.30 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடுவார் என படக்குழு அறிவிப்பு...


  • இலங்கைக்கு எதிரான போட்டியில் 106 மீட்டர் தொலைவுக்கு அதிக தூரம் சிக்சர் அடித்து ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை... உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை சொந்தமாக்கினார், முகமது ஷமி...

Next Story

மேலும் செய்திகள்