மகளிர் பிரீமியர் லீக் டி20 - 2 ரன்கள் வித்தியாசத்தில்.. தெறிக்கவிட்ட பெங்களூரு

x

மகளிர் பிரீமியர் லீக் டி20 - 2 ரன்கள் வித்தியாசத்தில்.. தெறிக்கவிட்ட பெங்களூரு

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஆறு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 53 ரன்களும், ரிச்சா கோஷ் 62 ரன்களும் அடித்திருந்தனர். தொடர்ந்து களமிறங்கிய உபி வாரியர்ஸ், 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்