சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர். சாம்பியன் பட்டம் வென்ற சர்வீசஸ்

x

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில் சர்வீசஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சர்வீசஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத சூழலில், 2வது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் சர்வீசஸ் அணி கோல் அடித்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்த நிலையில், ஆட்ட நேர முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணி சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றியது.சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர். சாம்பியன் பட்டம் வென்ற சர்வீசஸ்


Next Story

மேலும் செய்திகள்