"16 ஆண்டுகள், ஒரே பெயர் தல தோனி " - சிஎஸ்கே மகிழ்ச்சி

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இணைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றதோடு, 10 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. இந்த சூழலில், 2008ஆம் ஆண்டு அணி உருவாக்கப்பட்ட போது, தோனி இதே நாளில் தங்களுடன் இணைந்ததாக புகைப்படத்தை பகிர்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், எல்லாம் சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் சாதிக்க வேண்டியது மீதமுள்ளதாக பதிவிட்டுள்ளது. வருகிற ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை வழிநடத்துவதற்காக தோனி பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்