"15 மணி நேரம்...." - தவெக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மக்கள்

x

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்காக வாட்ஸ்அப், டெலிகிராம், உள்ளிட்டவற்றிற்கான QR கோட் மற்றும் லிங்குகளை த.வெ.க தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தி இருந்தார். நேற்று மாலை 5.30 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தில் ஒரு நாள் முடிவடைவதற்குள், குறிப்பாக 15 மணிநேரத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமானோர் ஒரே சமயத்தில் விண்ணப்பித்ததால் சர்வர் முடங்கியதாவும், இதனால் பலருக்கு தாமதமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறையும்போது சர்வர் தானாக சீராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கை அறிவித்த முதல் நாளில் 5 லட்சம் பேர் உறுப்பினராக வாய்ப்புள்ளது என்று நினைத்த எங்களுக்கு, சில மணிநேரத்தில் இத்தனை லட்சம் விண்ணப்பம் வந்தது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்