இன்றைய தலைப்பு செய்திகள் (14-08-2023) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவரின் தந்தையும் தற்கொலை...

நேற்று மாணவன் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலையில் சோக முடிவு...

உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் - முதல்வர் அறிவுரை

எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டாம்..

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவர் மற்றும் அவரது தந்தை தற்கொலை செய்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை...

நீட் விலக்கு மசோதாவை பொறுத்தவரை, ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என சொல்வது ஆளுநரின் அறியாமை எனவும் காட்டம்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை...

அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10 புள்ளி 3 சென்டி மீட்டர் மழைப்பதிவு...

சென்னையில் விடிய விடிய பெய்த மழையால், சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது...

கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி...

கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் நள்ளிரவில் சென்னையில் கனமழை பெய்தது...

தனியார் வானிலை ஆர்வலர் தகவல்...

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்...

நேற்று கொச்சியில் கைதான நிலையில், அமலாக்கத் துறையினர் நடவடிக்கை...

தமிழக சட்டப்பேரவையில், கடந்த 1989ஆம் ஆண்டு, ஜெயலலிதா தாக்கப்படவில்லை என கூறுவது தான் நாடகம்...

முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையை திரித்துக் கூறுவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்...

நாட்டின் 76 சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்...

பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு...

சுதந்திர தினத்தையாட்டி, தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு... இரண்டாவது இடத்தில் தாம்பரம் மாநகராட்சி...

சிறந்த நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், விருதுகளை வழங்குகிறார், முதலமைச்சர் ஸ்டாலின்...


Next Story

மேலும் செய்திகள்