இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-09-2023)

x
  • சென்னையில் எழும்பூர், கிண்டி, பாரிமுனை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை.....சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.............
  • சென்னையில் காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளை சூழ்ந்த மழை நீர்...அலுவலகம் முடிந்து வீட்டுச் சென்றவர்கள் கடும் அவதி...
  • தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை............திருச்சி, சேலம், தஞ்சை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது............
  • ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இந்தியா வருகை............உலக தலைவர்களுக்கான குடியரசுத் தலைவர் விருந்தில் பங்கேற்க அம்பானி, அதானிக்கு அழைப்பு............
  • இந்தோனேசியாவில் ஆசியான் மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி........ஜி-20 மாநாட்டுக்கு வரும் உலகத் தலைவர்களை வரவேற்க ஆயத்தமாகிறார்.............
  • மேற்குவங்கத்தில் எம்எல்ஏக்களின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு.....புதிய அறிவிப்பால் எம்எல்ஏக்களின் சம்பளம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக உயருகிறது...........
  • பிரதமர் மோடிக்கு இந்தியா மீது என்ன கோபம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி............எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பாரத் என்று பெயர் வைத்தார் பிரதமர் மோடி என்ன செய்வார் என்றும் வினா.............
  • கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல்விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்.........செப்டம்பர் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...........
  • அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்த விவகாரம்...........தாமாக முன்வந்து வழக்குகளை மீண்டும் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.......

Next Story

மேலும் செய்திகள்