லிஸ்டில் மிஸ்ஸான சரத்குமார், அன்புமணி..ஒரு கை பார்க்க நேரடியாக இறங்கிய ஓபிஎஸ் -அதிர்ச்சி டுவிஸ்டுகள்

x

லிஸ்டில் மிஸ்ஸான சரத்குமார், அன்புமணி

ஒரு கை பார்க்க நேரடியாக இறங்கிய ஓபிஎஸ்

நினைத்ததை விட பல அதிர்ச்சி டுவிஸ்டுகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வரும் நிலையில்,இதிலுள்ள சுவாரஸ்யங்களை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தலால் ஒட்டுமொத்த நாடே பரபரத்து கொண்டிருக்க...அதிர வைத்து வருகிறது அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்..

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவும் சூழலில், இக்கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் பல ட்விஸ்டுகளும், சர்பிரைஸ்களும் இடம்பெற தவறவில்லை.

இதில் குறிப்பாக, பாஜகவில் பல சர்பிரைஸ் என்ட்ரிகள் உள்ளன. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன், திடீரென பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில், தென் சென்னை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்ட சரத்குமாரின் பெயரை வேட்பாளர் பட்டியலில் எதிர்ப்பார்த்து கொண்டிருக்க...எதிர்ப்பார்க்காத வகையில் அவரின் மனைவி ராதிகாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும், பாஜகவுடன் ஓபிஎஸ் கைக்கோர்த்துள்ளதால், வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட....நேரடியாக பன்னீர்செல்வமே களமிறங்கியுள்ளார். ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல். முருகன் தான் வேட்பாளர் என பலர் நம்பிக்கொண்டிருந்த வேளையில், மத்திய பிரதேசத்தின் மாநிலங்களவை வேட்பாளராக எல். முருகனை தேர்வு செய்து குழம்ப வைத்தது பாஜக.

எனவே நீலகிரி தொகுதி யாருக்கு என்ற கேள்வி சுழன்று கொண்டிருக்க...அதிரடியாக எல். முருகனையே அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது பாஜக.

இதே நீலகிரி தொகுதியில், அதிமுக சார்பில் முதல்முறையாக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளது தனிகவனம் பெற்றுள்ளது..

இந்த வரிசையில் அதிமுகவின் ஒரே பெண் வேட்பாளரான சிம்லா முத்துச்சோழனும் இடம்பெற்றுள்ளார். 2016ல் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் தற்போது அதிமுகவின் நெல்லை வேட்பாளர்.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, கடலூரில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிரடியாக இயக்குநர்

தங்கர் பச்சானை களமிறக்கியுள்ளது.

இது போல் சற்றும் எதிர்பாராத வகையில் ஸ்டார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட, தொண்டர்கள், அரசியல் பார்வையாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வேட்பாளர்களின் பெயரும் வேட்பாளர்கள் பட்டியலில் மிஸ் ஆகியுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏ. பதவியை துறந்த விஜயதாரணி, பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பெயர் இடம்பெறவில்லை.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரன் கோவை தொகுதி வேட்பாளராக களம் காண்பார் என எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், அவரின் பெயர் விடுபட்டு போனது...

ஏற்கனவே கள்ளக்குறிச்சி எம்பியாக இருந்த அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி, மீண்டும் போட்டியிடுவார் என கருதப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை.

அதே போல், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,

அவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்