மதுரையில் ரூ.14 கோடியில்.. அமைச்சர் உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

மதுரையில் 6 கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் அகாடமியும், 8 கோடி ரூபாய் செலவில் செயற்கை ஓடுதளமும் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் தொடங்கி வைத்தார். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தும் நோக்கில், அனைத்து ஊராட்சிகளுக்கும் 86 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் படி 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கலைஞர் கிட் என்னும் பெட்டகத்தை, 420 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார். ஒவ்வொரு பெட்டகத்திலும் 100 டி-ஷர்ட், 200 தொப்பிகள் உள்பட 33 விளையாட்டு உபகரணங்கள் இடம்பெறுள்ளன. விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மதுரையில் 6 கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் அகாடமியும், 8 கோடி ரூபாய் செலவில் செயற்கை ஓடுதளமும் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார். விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்