"யாராலும் முடியாது..." லிஸ்ட் போட்டு மேடையில் பிரதமர் மோடி சவால்

x

மக்களவைத் தேர்தலையொட்டி உத்தர பிரதேச மாநிலம் அஸம்கர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். "மோடியின் உத்தரவாதம்" என்றால் அதற்கு மற்றுமொரு அண்மைக்கால உதாரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் என குறிப்பிட்ட பிரதமர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியல் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை என்ற முகத்திரையை தான் கிழித்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்து மற்றும் முஸ்லிம்களிடையே போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் சண்டைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் பொய்களை பரப்பி வருவதாக தெரிவித்த பிரதமர், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என இந்தியா கூட்டணி தெரிவித்து வரும் நிலையில், இதை யாராலும் ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்