கசிந்த ஒரு விசயத்தால் நாடே வெலவெலக்க.. மக்களுக்கு பிரதமர் எழுதிய ஒற்றை கடிதம்..என்ன சொன்னார்?

x

கசிந்த ஒரு விசயத்தால் நாடே வெலவெலக்க.. மக்களுக்கு பிரதமர் எழுதிய ஒற்றை கடிதம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெடிக்கும் பூகம்பம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு , பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்... கடிதத்தில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

தேர்தல் பத்திரத்தை கொண்டு, ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற நன்கொடையை பார்த்து, நாடே கொஞ்சம் வெலவெலத்து போயுள்ளது. இதில் பாஜக மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற அளவிற்கு விவகாரம் முற்றிவிட்டது. நிலைமை இப்படி இருக்க, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்....

என் அன்பிற்குரிய குடும்ப உறுப்பினர்களே என அன்பு பொங்க துவங்குகிறது பிரதமர் மோடியின் மக்களுக்கான கடிதம். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பதை, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர்,140 கோடி மக்களின், ஆதரவும், தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், தன்னை ஊக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர், உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு தன் மீதான நம்பிக்கையை கூட்டியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட பட்டுள்ளது

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏறபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், ஜிஎஸ்டி அமலாக்கம், 370 -வது சட்டப்பிரிவு நீக்கம் போன்றவற்றை தன் ஆட்சிகாலத்தின் வரலாற்றுச் சாதனைகள் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமரின் பெருமிதங்கள் ஒரு புறம் என்றால், மற்றொரு பக்கம் பாஜகவின் மீதான குற்றச்சாட்டுகள் வலிமை பெற்று வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்களின் வாயிலாக, பாஜக 6 ஆயிரத்து 68 கோடி ரூபாய் பெற்றிருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

இப்படி பல கோடி வசூலித்த பாஜக-வை விட்டுவிட்டு, நன்கொடை வசூல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்பட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

எஸ்பிஐ வங்கியின் தரவுகள் பாஜக 50 சதவீதம் நன்கொடை பெற்றுள்ளதையும், காங்கிரஸ் கட்சி 11 சதவீதம் நன்கொடை பெற்றுள்ளதையும் காட்டுகின்றன. ஆனால், பாஜக கண்டுகொள்ளாமல் விடப்பட்டதையும், 300 கோடி பணம் வைத்திருக்கும் காங்கிரசின் கணக்கு முடக்கப்பட்டிருப்பதையும் மல்லிகார்ஜூன கார்கே கேள்விப்படுத்தியுள்ளார்.

ஆக மொத்தம், தேர்தல் பத்திர விவகாரம், பாஜகவே எதிர்பார்க்காத ஒரு பிரச்சார ஆயுதமாக எதிர்கட்சிகளுக்கு வாய்த்துள்ளது. இந்த நிலையில்தான், நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்