திமுக தேர்தல் அறிக்கையில் ஆளுநருக்கு செக் வைத்த முதல்வர் ஸ்டாலின்

x
  • நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்...
  • அதில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு நீக்கப்படும் என்றும், மாநில முதலமைச்சரின் ஆலோசனைப்படியே ஆளுநராக நியமிக்கப்படுவர் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
  • தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும் என்றும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் உள்ள மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும், சென்னையில் மூன்றாவது ரயில் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பெட்ரோல் விலையை 75 ரூபாய்க்கும், டீசல் விலையை 65 ரூபாய்க்கும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
  • நாடு முழுவதும் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் எனவும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதுதவிர மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்வி கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும்,
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், ஜிஎஸ்டி திருத்தம் செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்