பா.ஜ.க. அரசின் கடைசி பட்ஜெட்... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் - எகிறும் எதிர்பார்ப்பு

x

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், நாடாளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பா.ஜ.க.வின் 2-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இக்கூட்டத்தொடரில், வருமான வரி வரம்புகளில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்