இன்றைய தலைப்புச் செய்திகள் (31-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

நாடாளுமன்ற கூட்டத்தொடர் - குடியரசு தலைவர் உரை

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது, நாடாளுமன்ற கூட்டத்தொடர்....

எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு, மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி பேட்டி.....

"5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா"

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும் என குடியரசு தலைவர் முர்மு உரை

ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளதாகவும், பெருமிதம்

பிரதமரின் புகழ் பாடியதை தவிர எதுவும் இல்லை"

பிரதமரின் புகழ் பாடியதை தவிர குடியரசுத் தலைவரின் உரையில் வேறு எதுவும் இல்லை.....

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்.....

"தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ - திமுக அரசு அனுமதிக்காது"

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்த திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது....

முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்....

ஆ.ராசா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எம்ஜிஆர் குறித்த திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்......

வரலறு நெடுக அதிமுக தலைவர்களை பிம்பச்சிறையிட திமுக முயற்சி என்றும் குற்றச்சாட்டு.....

பிப்.12ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்?

2024ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ல் தொடங்க வாய்ப்பு....

19ம் தேதி பொது பட்ஜெட்டும், 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்......

தமிழ்நாட்டில் முதலீடு - ஸ்பெயின் நிறுவனங்கள் ஆர்வம்

ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவன நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு.....

ஈரோடு பெருந்துறையில், 400 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க, ரோக்கா நிறுவனம் விருப்பம்....

"40 தொகுதிகளிலும் வெற்றி முக்கியம்"

நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும்...

கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்...

"கூட்டணி பேச்சுவார்த்தை - திமுக இன்னும் தொடங்கவில்லை"

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி

பேச்சுவார்த்தையை திமுக இன்னும் தொடங்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் பேட்டி...

அரசியல் கட்சிகள் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கும், எப்போதோ பேசியதை இப்போது பரப்புவதா என்றும் கருத்து....

பாமக தனித்து போட்டியா? கூட்டணியா?

தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நாளை சென்னையில் கூடுகிறது பாமக பொதுக்குழு.....

நாடாளுமன்ற தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது குறித்து பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்....


Next Story

மேலும் செய்திகள்