இன்றைய தலைப்புச் செய்திகள் (29-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

"அதிக முதலீடுகளை ஈர்ப்பேன்"

ஸ்பெயின் வந்த தமக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு....

தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி அதிக முதலீடுகளை ஈர்ப்பேன் என்றும் நம்பிக்கை.....

"ஈபிஎஸ் வெளிநாடு சென்றது ஏன்?"

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும் பணத்தை டெபாசிட் செய்ய தான் வெளிநாடு சென்றாரா?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி...

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை.....

பிப்ரவரி 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட், 4ம் தேதி மதிமுக உடன் பேச்சுவார்த்தை...காங்கிரஸுடன் 9ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை என்றும் தகவல்....

தென்காசி, நெல்லை நிர்வாகிகளுடன் ஆலோசனை

தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை...

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு...

"பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை"

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு......

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்.....

"அதிமுக படுதோல்வி அடையும்"

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும்...

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கணிப்பு...

"சங்கி" கெட்டவார்த்தை இல்லை - ரஜினி

சங்கி என்பது கெட்டவார்த்தை என மகள் ஐஸ்வர்யா கூறவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்....

பட விளம்பரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றும் பேட்டி....

யார் சங்கி?- வானதி சீனிவாசன் விளக்கம்

நாட்டை நேசிக்கின்ற, நாட்டின் நலனில் சமரசம் செய்து கொள்ளாதவர்களே சங்கி...

வானதி சீனிவாசன் எம்எல்ஏ, புதிய விளக்கம

கருப்புக் கொடி போராட்டம் - 100 பேர் கைது

புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி போராட்டம்......

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது....



Next Story

மேலும் செய்திகள்