"நோயாளிகளின் தகவலை மத்திய அரசு ...தனியாருக்கு விற்கலாம்" - இந்திய மருத்துவ சங்கம் பரபரப்பு

x

நோயாளிகளின் முழு தகவல்களை மத்திய அரசு பெற்று வருவதாகவும், இது தனி மனித உரிமை மீறல் எனவும் இந்திய மருத்துவ சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன், 1980களில் சுகாதாரத்துறையில் அரசு முக்கிய பங்கு வகித்ததாகவும், அதற்கு பிறகு அரசு கைவிட தொடங்கியதால் 70 சதவீத மருத்துவ சேவை தனியாரிடம் சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் அனைத்து தகவல்களையும் மத்திய அரசு சேகரித்து வருவதாகவும், இதை தனியார் காப்பீடு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் விற்க வாய்ப்புள்ளதாகவும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்