வெற்றி துரைசாமி மாயமான விவகாரம் - ரத்த மாதிரிகள் ஹிமாச்சலுக்கு அனுப்பி வைப்பு

x

வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்காக அவரது பெற்றோரின் ரத்த மாதிரிகள் ஹிமாச்சல் பிரதேச ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, கடந்த 4 ஆம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் மாயமானார். காணாமல் போன வெற்றியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர், உள்ளூர் காவல்துறையினர் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றியின் உடைமைகள் மற்றும் செல்போனை காரில் எடுத்துள்ள நிலையில், பாறைகளின் இடுக்குகளிலிருந்து மூளை பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மூளை பாகம் மாயமான வெற்றி உடல் பாகமா? எனக் கண்டறிய, அவரது பெற்றோர்களின் ரத்த மாதிரிகளை கீழ்ப்பாக்கம் தடயவியல் மருத்துவர் வினோத் நேரில் வந்து எடுத்துச் சென்றார். பின்னர் அந்த ரத்த மாதிரிகளை ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ரத்த மாதிரிகளின் டிஎன்ஏவை ஒப்பிட்டு பார்த்த பின்னரே, அது வெற்றியின் மூளை திசுவா என்பது தெரியவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்