காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு... 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது...
  • சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம்.... பாஜகவின் பிரிவினைவாத அரசியலை காட்டுவதாகவும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்...
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்... மனித நேய குடியுரிமை கொள்கையை, இன, மதம் என பிளவுவாத கொள்கையாக மாற்றியது மத்திய பாஜக அரசு என குற்றச்சாட்டு...
  • அதிமுக அளித்த ஆதரவினால் தான் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது... அதிமுகவுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை...
  • இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிராக சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த நினைத்தால் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது..... தேர்தல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாகவும், ஈ.பி.எஸ் விமர்சனம்....
  • சி.ஏ.ஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என்று, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எதிர்ப்பு.... தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் எனவும் அறிக்கை....
  • கேரளா மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்..... முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்....
  • சி.ஏ.ஏ சட்டம் குடியுரிமையை ரத்து செய்தால் அமைதியாக இருக்க மாட்டோம் என மம்தா ஆவேசம்..... பாஜகவின் அரசியல் உள்நோக்கத்தை கண்டிப்பதாகவும், கருத்து.....
  • சென்னையில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது 17வது ஐபிஎல் தொடர்... சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய திட்டம்...
  • மகளிர் பிரீமியர் லீக் டி.20 தொடரில், குஜராத் அணி வெற்றி... 8 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது....

Next Story

மேலும் செய்திகள்