காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக அழைப்பு.. தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்தாகும் எனத் தகவல்......
  • நாடாளுமன்ற தேர்தலுக்காக 100 முதல் 150 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிடுகிறது.. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என தகவல்...
  • தேர்தலில் கூட்டணி கட்சியை நம்பியே திமுக பயணித்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்... கூட்டணி இல்லாமல் திமுக நின்றால் டெபாசிட் இழக்கும் என்றும் பேட்டி..
  • எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள் என நெல்லை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம்... நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து திமுக முற்றிலுமாக அகற்றப்படும் என்றும் பேச்சு..
  • திமுகவை இல்லாமல் ஆக்கிவிடுவதாக சவால் விட்டவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள்.... பிரதமரும் காணாமல் போனவர்கள் வரிசையில் இணைந்துவிட போகிறார் என்று டி.ஆர்.பாலு தாக்கு..
  • கருணாநிதியின் புகழை யாராலும் மறைக்க முடியாது, அவரது புகழ் குறித்து மோடிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை என சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி.. குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும் பேட்டி..
  • எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி, பிரதமர் மோடி அதிமுகவினரை ஏமாற்றப்பார்க்கிறார்..... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..
  • இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என திராவிடர் கழக தலைவர் வீரமணி நம்பிக்கை...பாத யாத்திரையால் பாஜகவுக்கு ஒன்றும் கிடைக்காது எனவும் கருத்து...
  • கூட்டணியில் ஒபிஎஸ் தரப்பு இல்லை என அறிவிக்காததால், பாஜகவுடனே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.... எத்தனை தொகுதிகள் எந்த சின்னம் என்பது குறித்து எல்லாம் இதுவரை பேசவில்லை என்றும், பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்..
  • காங்கிரஸ் தலைமையிலான இமாச்சலப் பிரதேச அரசை, பாஜக., பணபலம் மற்றும் மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் ஆணையை நசுக்க விரும்புகிறது..... காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..
  • மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உத்தர பிரதேச அணி அபார வெற்றி... 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது...

Next Story

மேலும் செய்திகள்