காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • ஸ்பெயின் வந்த தமக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு.... தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி அதிக முதலீடுகளை ஈர்ப்பேன் என்றும் நம்பிக்கை
  • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளதை போல் தெரிகிறது என அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்... யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே மறைமுக போட்டி நடப்பதாகவும் காட்டம்...
  • புதுக்கோட்டையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி போராட்டம்... கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது....
  • பட்டினி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக சபாநாயகர் அப்பாவு பெருமிதம்... பல குடும்பங்கள் வறுமையில் உள்ளதாக ஆளுநர் கூறிய கருத்துக்கு, அரசு திட்டங்களை பட்டியலிட்டு விளக்கம்...
  • டாஸ்மாக் கடைகளில் வருகிற ஒன்றாம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது... பீர்கள் மற்றும் அந்தந்த மதுபான ரகங்களை பொறுத்து, 10 ரூபாய் முதல் உயர்வதாக அறிவிப்பு....
  • கோயம்பேட்டில் 'லூ லூ' மால் என்பது முற்றிலும் தவறான தகவல், சித்தரிக்கப்பட்டது... ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயல் என அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தகவல்...
  • தென்காசி மற்றும் நெல்லை நிர்வாகிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை... கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் வெற்றிக்காக பணியாற்றுமாறு அறிவுறுத்தல்...
  • நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தகவல்... பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு வெளியாகும் எனவும் பேட்டி...
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விதிகளை மீறியதாக புகார்... இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு, ஒரு டீ-மெரிட் புள்ளியை வழங்கியது ஐ.சி.சி...
  • 2வது டெஸ்ட் மற்றும் தொடரில் இருந்து கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகல்... சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு...

Next Story

மேலும் செய்திகள்