பெங்களூரு குண்டு வெடிப்பு...தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பு...NIA கண்டறிந்த திடுக்கிடும் தகவல்

x

பெங்களூர் ராமேஸ்வரம் உணவகத்தில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பத்து பேர் காயமடைந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு தேடி வந்தனர். தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இருவரும் கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியை சேர்ந்த முஸ்வீர் உசேன் மற்றும் அப்துல் மத்தின் தாஹா என்பது தெரியவந்துள்ளது. இருவரும், ஐ.எஸ்.ஐ.எஸ் பங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நிலையில்,கடந்த 2020ல் நடந்த குற்ற வழக்கு ஒன்றில், சுமார் நான்கு வருடங்களாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2020ல் பெங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பில் கைதான ஷரிக்குடன் இருவரும் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இருவரும் கர்நாடகாவின் சிவமொக்கா பகுதியில் வெடிகுண்டு தயாரிக்க கற்றுக்கொண்டு ஒத்திகை பார்த்ததும் தெரியவர, முஸ்வீர் உசேன் மற்றும் அப்துல் மத்தின் தாஹாவை தேடும் பணியை என்.ஐ.ஏ அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்