எதிர்பாராத நேரம் இந்தியா கொடுத்த `Surprise'..இஸ்ரோவின் அடுத்த மூவ்..

x

மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக, ககன்யான் என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி வட்டப்பாதைக்கு, 3 வீரா்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் முன்னதாக, 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

TV-D1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட், பூமியில் இருந்து 17 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றதும், அங்கிருந்து 4 ஆயிரத்து 520 கிலோ எடையுள்ள மாதிரி கலன், தனியாக பிரிந்து பூமியை நோக்கி வரும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டர் கிழக்கே, வங்கக் கடலில் 12 பாராசூட்கள் மூலம் அது கடலில் இறக்கப்படும். கடலில் விழுந்ததும் கடற்படையினர் மாதிரி கலனை மீட்பர். 'ககன்யான்' திட்டத்தின் 3 கட்ட பரிசோதனை வெற்றிக்கு பிறகு, 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்