சைதை துரைசாமியின் மகன் மாயம்?... `சட்லெஜ் ஆற்றில் விழுந்த கார்’ - சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுநர்

x

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற இன்னோவா கார், சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஆற்றில் விழுந்த வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார், தமிழ்நாடு போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்